பாலக்கோடு, ஜூலை 26 | ஆடி 10 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் உள்ள வேணுகோபால் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத்தின் தேர்தல் பொதுக்குழு கூட்டம் ஜூலை 27ஆம் தேதி (ஆடி 11) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் குருசாமி தலைமையிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சபரிராஜ், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சங்கர் குருசாமி, வித்யாசாகர் மற்றும் மாவட்ட தொண்டர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அவர்கள், சங்கத்தின் வளர்ச்சி, பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் ஊர்தல்களில் நடைபெறும் ஐயப்பபடயாத்திரை ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக, பாலக்கோடு நகரைச் சேர்ந்த ஐந்து கிளைகள் புதுப்பிக்கப்பட்டன. அந்த பகுதிகள்: சிவாச்சாரியார் தெரு, அண்ணா நகர், மந்திரிகவுண்டர் தெரு, மாரியப்பசெட்டித் தெரு மற்றும் தீர்த்தகிரி நகர். இந்த கிளைகளுக்காக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் வாயிலாக, ஐயப்ப சேவா சங்கத்தின் பணிகள் மேலும் வலுப்பெறும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. பக்தி மற்றும் சேவையின் வழியிலேயே சமூக ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன், நிர்வாகிகள் அனைவரும் உறுதியேற்றனர்.
.gif)

.jpg)