Type Here to Get Search Results !

மதுக்கடையால் அவலம் – வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை.


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 13-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான விற்பனைக்கடை அருகிலேயே, கடந்த UPSC தேர்வில் இந்திய அளவில் 29வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்ற பா. சிவச்சந்திரனின் பூர்வீக வீடும் அமைந்துள்ளது.


இந்த மதுக்கடையை அண்டிய சுற்றுச்சுவரிலும் வீட்டு முன்புறத்திலும் மது அருந்தும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுமக்கள் கடும் அச்சத்துடன் இருக்கின்றனர். அருந்திய பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் காகிதங்கள் வீசப்படுவதால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. சிலர் உரையாடல்களில் வசை மொழிகளையும், அசிங்க வார்த்தைகளையும் பயன்படுத்துவதால் பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலும் சண்டைகள், சச்சரவுகள் நடைபெறுவதுடன், இருசக்கர வாகன விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏராளம். மேலும், இக்கடையில் உள்ளூரைச் சேர்ந்த விற்பனையாளர்கள் பணியாற்றுவதால், மது பாட்டில்கள் சந்துக்கடைகளுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனால் சட்டவிரோத விற்பனை நிலவுகிறது. ஏற்கனவே ஒருவருக்கு டிஸ்மிஸ் சாசனம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, வெங்கடசமுத்திரம் டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies