Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.


பாலக்கோடு, ஜூன் 14-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி இந்துமதி தலைமையில் நடைபெற்று பெரும் மக்கள்ச் சேர்க்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை எழுத்தர் திருமதி பத்மா முன்னிலை வகித்தார். தூய்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால்களில் நீர் தேங்காமல் சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, பொது இடங்களில் தூய்மையை பேணுவது, சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து அலுவலர்கள் உரையாற்றினர்.


இதனைத் தொடர்ந்து, "நம்ம ஊர் தூய்மை – நம்ம பொறுப்பு" என்ற தொனிப் பொருளில் தூய்மைக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், நகராட்சியினர், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies