பாப்பிரெட்டிப்பட்டி, ஜுன் 09-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வேங்கனார் வஜ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வாசலுக்கு முன்னால் ஒரு இரும்பு தடுப்பு (பேரிகார்டு) வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நடைபெறும் நேரங்களில், மாணவர்கள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பிற்காக இது வைக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த தடுப்பு சாலையின் இடையே விடப்பட்டு இருக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்பை சரியாக கவனிக்க முடியாமல் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசாரும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து, பள்ளி நேரம் முடிந்ததும் அந்த தடுப்பை சாலையின் ஓரமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். இந்த கோரிக்கை உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.