Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டியில் வீட்டு மனை மற்றும் பட்டா கோரி மனு.


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 18- 

பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த் துறைக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக பொம்மிடி, பொ.துறிஞ்சிப்பட்டி, ஜங்காலஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக அதே கிராமங்களில் வீடு மற்றும் நிலம் இல்லாமல் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், அரசு வழங்கும் இலவச வீட்டு மனை மற்றும் உரிமை பட்டா பெற வேண்டி, அவர்கள் 18.06.2025 அன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பஞ்சாயத்து மட்டத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தங்கள் பகுதியில் வீட்டு மனை வழங்கப்படவில்லை எனக் கூறிய அவர்கள், தங்களுக்கும் முறையாக நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


மேலும், இதுபோன்ற அரசு நலத்திட்டங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், அரசுத் திட்டங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களாக தாங்கள் இருக்கின்றோம் என்பதை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies