தருமபுரி, ஜூலை 16:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை பகுதியில் ரயில் பாதையில் இளைஞர் மற்றும் சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த மொரப்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அரூர் அருகே எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் கன்சிராம் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அரசு என்பவரின் மகள் அமுதபிரியா என்ற அறிவுஜோதி (16) என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் இருவரின் உயிரிழப்பால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். சம்பவம் குறித்து மொரப்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)

.jpg)