Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ.26 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – மாநில அரசின் சாதனைகள் குறித்து தெருமுனைப் பொதுக்கூட்டம்.


பாலக்கோடு, ஜூன் 18-

திமுக தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் 4 ஆண்டு வளர்ச்சி சாதனைகள் குறித்து விளக்க தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே பேரூர் கழக திமுக சார்பில் தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர்ஹசேன் தலைமையில் நடைபெற்றது. இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பி.கே.முருகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மற்றும் ஒன்றிய துணை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில் பேசும் போது, பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, “பாலக்கோடு பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.26 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும், “மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன்படுகின்றன” என்றும் குறிப்பிட்டார்.


மகளிருக்கான விடியல் பயணம், தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம், மற்றும் சமூக நல திட்டங்கள் பற்றியும் மாணவர்களுக்கான கல்வி உதவிகள், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான திட்டங்களை பற்றியும் விளக்கினார். நிகழ்ச்சிக்கான நன்றி உரையை இளைஞர் அணி துணை அமைப்பாளர் பழனிசாமி வழங்கினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies