Type Here to Get Search Results !

பாலக்கோடு ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முறைகேடு – பயனாளர்களை தவறாக தேர்வு செய்ததாக புகார்.


பாலக்கோடு, ஜூன் 18 –

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளர்கள் தேர்வு செய்வதில் கடும் முறைகேடுகள் நடந்துள்ளன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வீடும் நிலமும் உள்ள நபர்கள், மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டம் பெற பயனாளிகளிடம் பணம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பயனாளர்களை தேர்வு செய்வதில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பதவிக்காலம் முடிந்த ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் கூட்டாக திட்டமிட்டும், பணம் பெற்று பயனாளர்களை தவறாக தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக பி.செட்டிஹள்ளி, பேவுஹள்ளி, பேளாரஹள்ளி மற்றும் ஏர்ரனஹள்ளி ஆகிய ஊராட்சிகளில் இதற்கான தகவல் உறுதியாகக் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், அதேபோல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி பொறியாளர்கள், ஒவர்சீயர்களும் பணம் பெற்றுக் கொண்டு, தவறான தேர்வுக்கு துணைபுரிந்து வருகின்றனர். மேலும், ஆய்வு நடவடிக்கையில் செல்லும் பொழுது ஒவர்சீயர்கள் வீட்டு பயனாளர்களிடம் ரூ.2000 வரை லஞ்சம் கேட்பதாகவும் புகார் தெரிவிக்கிறார்.


இதையடுத்து, இந்த ஊராட்சிகளில் பயனாளர்களின் வீட்டுக்கு நேரில் சென்று, வீடு கட்டப்பட்டுள்ள நிலம் மற்றும் பயனாளரிடம் ஏற்கனவே வீடு, நிலம் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தி, ஒரு குடும்பத்தில் இருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பதும் உடனடி விசாரணை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுத் திட்டத்தின் நியாயங்களை மீறும் இம்மாதிரியான செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies