Type Here to Get Search Results !

தருமபுரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் திரளாக தரிசனம்.


தருமபுரி, ஜூலை 15:


தருமபுரி நகரின் குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில், அம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு, ரூ.20 லட்சம் மதிப்பிலான ₹500, ₹200, ₹100 மற்றும் ₹50 நோட்டுகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாட்டை காண குமாரசாமிபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா நிறைவில், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies