Type Here to Get Search Results !

50 ஆண்டுகளாக வீடுகள் இல்லாமல் தவிக்கும் B.பள்ளிப்பட்டி மக்கள் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.


தருமபுரி, ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள லூர்துபுரம், அருந்ததியர் காலனி, வைரனூர் உள்ளிட்ட பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளின்றி கடும் துயரில் வாழ்ந்து வருகின்றனர். ஒரே வீட்டில் 3 முதல் 4 குடும்பங்கள் கூடிவாழும் நிலை தொடர்ந்து வருகிறது.


இதனைக் கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு முறையில் மனுக்கள் அளித்தும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அருகாமையில் உள்ள அரசின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதோடு, பஞ்சமி நிலமான 300 ஏக்கர் விட்டு 5 முதல் 9 ஏக்கர் வரை தனிநபர்களால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இந்த நிலங்களை சரியாக வகைப்படுத்தி, வீட்டில்லாமல் தவிக்கும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி மற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். இன்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று மனு அளித்தனர்.


மனுக்கள் சரியாக பரிசீலனை செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொள்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies