Type Here to Get Search Results !

மழையால் பாதிக்கப்பட்ட சிட்டிலிங் ஊராட்சி காரைப்பாடி மலை கிராம மக்கள் சாலை வசதி கோரி கண்ணீருடன் மனு.


அரூர், ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம், சிட்டிலிங் ஊராட்சிக்குட்பட்ட காரைப்பாடி மலை கிராம மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்து, இடங்களெல்லாம் குழிகள் உருவாகி, கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.


இக்கிராமத்திற்கு கடந்த 2021ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே.சம்பத்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழியாக, மின் வசதிக்காக 176 மின்கம்பங்கள், 48 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள், 184 வீடுகளுக்கான இலவச வீடுகள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


அதேபோல் தற்போது சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் காரைப்பாடி மலை கிராம மக்கள், மீண்டும் வழிசொல்லும் நம்பிக்கையுடன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமாரிடம் சாலை வசதி கோரி மனு வழங்கியுள்ளனர். "தண்ணீர் கேட்டோம், ஆனால் கண்ணீரை மட்டுமே வடிக்கிறோம்" என்றுதான் இந்த கிராம மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies