Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.66 லட்சம் மதிப்பில் புதிய சாலை பணி தொடக்கம்!


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 18:

பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம், மோளையானூரில் பாரத பிரதமர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் தலைமையிலும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி அவர்கள் தலைமை வகித்து, சாலை பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வின் ஏற்பாடுகளை பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சி. முத்துக்குமார் அவர்கள் செய்து வைத்திருந்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. சித்தார்த்தன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ. சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் P.S. சரவணன், T. நெப்போலியன், தலைமை பேச்சாளர் இராசு. தமிழ்செல்வன், கிளை நிர்வாகிகள் திருவாசகம், இளஞ்செழியன், ரமேஷ் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சர்மா, சரவணன், புகழேந்தி, ஐடி விங் சக்தி ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies