Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் குறுந்தொழில் முன்னேற்ற பயிற்சி முகாம் – 30 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தர்மபுரி, ஜூன் 17 –

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் கடந்த 16.06.2025 முதல் 18.06.2025 வரை, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் (PMFME) கீழ், EDI-TN தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் மூலமாக 30 பயனாளிகளுக்கு தொழில்முனைவர் பயிற்சி (EDP Training) வழங்கப்பட்டது.


பயிற்சியை மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. சுப்பையா பாண்டியன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட வளாளர் திருமதி கௌரி, மற்றும் EDII மாவட்ட மேலாளர் திரு. கௌதம் சண்முகம் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக பங்கேற்றனர். பயிற்சியில், திரு. சங்கரலிங்கம் தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கியதுடன், திட்ட தயாரிப்பு, நிதி மேலாண்மை, சந்தை ஆய்வு உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது, பயிற்சி நிறைவில் அனைத்து பயனாளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies