Type Here to Get Search Results !

பாலக்கோடு‌ அண்ணாநகரில் +2 மாணவி வயிற்று வலியால் உயிரை மாய்த்துக்கொண்டார்; போலீசார் விசாரணை.


பாலக்கோடு, ஜூன் 19 –

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணாநகரை சேர்ந்தவர் குமார். அவருக்கு மனைவி வனிதா, ஜெயலட்சுமி (19), தர்ஷினி (17), ஹரிகரன் (10) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் தர்ஷினி, பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் கல்வி கற்றுவருகிறார்.


தர்ஷினிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். சிகிச்சை பெற்றும் குணமாகாததால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 17-ஆம் தேதி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தாயிடம் வயிற்று வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். தாய் வெளியேறியபோது, தர்ஷினி வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலியால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies