Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா பறிமுதல் – காரிமங்கலம் சோதனை சாவடியில் போலீசார் அதிரடி!.


பாலக்கோடு, ஜூன் 13:

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சொகுசு காரில் கடத்தி வந்த வழக்கில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 306 கிலோ குட்காவை தருமபுரி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டி.எஸ்.பி மனோகரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் எஸ்.ஐ.க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை செய்ததில், 306 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட டிரைவர் கணேச்பாய் ரப்பாரி (25), குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி குட்கா கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சொகுசு காரும், குட்கா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரைவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies