Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் உரிய அனுமதியின்றி இயங்கிய 31 வாகனங்களுக்கு ₹3.25 லட்சம் அபராதம் – 6 வாகனங்கள் பறிமுதல்.


பாலக்கோடு, ஜூன் 13 –

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. ஜெயதேவராஜ் அவர்களுக்கு புகார்கள் கிடைத்தன. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியன் தலைமையில், புறவழிச் சாலையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சோதனையின் போது, உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட ஆட்டோ, டிராக்டர், பள்ளி வாகனம், மற்றும் கர்நாடகா பதிவில் உள்ள மினி சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், சாலைவரி செலுத்தாமல் இயங்கிய 9 ஜே.சி.பி உள்பட மொத்தம் 31 வணிக வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதற்காக மொத்தமாக ₹3,25,740 அபராதம் விதிக்கப்பட்டது.


இதில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலைவரி செலுத்தாத பள்ளி வாகனம், டிராக்டர், ஆட்டோ, மற்றும் மினி சரக்கு லாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies