Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி அருகே பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆ.மணி எம்.பி.


தருமபுரி, ஜூன் 10:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பல மாணவ மாணவியர்கள் காயமடைந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் தகவல் அறிந்த தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி எம்.பி அவர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டிய அவசியத்தை மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வின்போது திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ. எஸ். சண்முகம், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், மருத்துவர்கள் மற்றும் காயமடைந்த மாணவர்களின் உறவினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies