மோலையானூர் அடுக்குமாடி குடியிருப்பில் 15 நாட்களாக குடிநீர் வரத்து நிறுத்தம் – பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மோலையானூர் அடுக்குமாடி குடியிருப்பில் 15 நாட்களாக குடிநீர் வரத்து நிறுத்தம் – பொதுமக்கள் கோரிக்கை.


பாப்பிரெட்டிப்பட்டி, மே 11:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மோலையானூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 80 குடும்பங்கள் கடந்த 15 நாட்களாக குடிநீர் இல்லாத துன்பத்தில் தவித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பில் குடிநீர் சிக்கல் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், மோலையானூர் ஊராட்சி செயலாளர், மற்றும் குடிநீர் விநியோக பொறுப்பாளர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் குழுவில் (WhatsApp Group) இந்த பிரச்சனையை பதிவு செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், “இந்த செய்தியைக் கேட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எங்களை பார்க்க வேண்டும். இனி ஒரு வாரத்தில் தீர்வாகக் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்,” எனக் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.


இந்த குடிநீர் பிரச்சனையை அரசு உடனடியாக எடுத்துக்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்களின் கோரிக்கையாகும்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad