பொம்மிடியில் முக்கிய சாலை சந்திப்பில் திசை காட்டும் பலகை இல்லாததால் பொதுமக்களுக்கு குழப்பம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

பொம்மிடியில் முக்கிய சாலை சந்திப்பில் திசை காட்டும் பலகை இல்லாததால் பொதுமக்களுக்கு குழப்பம்.

பொம்மிடி, மே 08:

பொம்மிடியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் மாவட்ட முக்கிய சாலை எண் 328 (மல்லாபுரம் - பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் அரூர் செல்லும் மாவட்ட முக்கிய சாலை எண் 1241 (மல்லாபுரம் - கோபிநாதம்பட்டி கூட்ரோடு) ஆகிய இரு சாலைகளும் பொம்மிடி காவல் நிலையம் முன்பாக சந்திக்கின்றன. இந்த முக்கிய சாலை சந்திப்பில் முறையான திசை மற்றும் தொலைவு காட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக பிற மாவட்டங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பெரிதும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.


தற்போது அங்கு உள்ள அறிவிப்பு பலகை அரூர், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, சர்க்கரை ஆலை மற்றும் மெனசி போன்ற ஊர்களுக்கான தகவல்களையே மட்டும் உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம், ஊத்தங்கரை, திருவண்ணாமலை, தீர்த்தமலை, வேலூர், சென்னை, திண்டிவனம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் முக்கிய சாலை வழிக்குறிப்புகள் முழுமையாக இல்லாதது குறையிடப்படுகிறது.


இந்த நிலைமை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வலி மற்றும் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த சந்திப்பில் அனைத்து முக்கிய நகரங்களுக்கான திசை மற்றும் தூரம் ஆகியவற்றை குறிப்பிடும் நவீன திசைகாட்டும் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என அவர்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad