பாலக்கோடு, ஜன.08:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பாலக்கோடு நகரப் பகுதியில் நடைபெற்றது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆன்மிக நம்பிக்கைகளுக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கும் உரிய அங்கீகாரமாக அமைந்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். தீர்ப்பை வரவேற்றும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாலக்கோடு நகரத் தலைவர் ஆர்.கே. கணேசன், மத்திய நலத் திட்டப் பிரிவு பொறுப்பாளர் பி.கே. சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் சங்கீதா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், காரிமங்கலம் மண்டல தலைவர் ராஜசேகர், நகரப் பொதுச் செயலாளர் எஸ். தண்டபாணி, நகர செயலாளர் எம். ராஜாராம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், நீதிமன்ற தீர்ப்பு மக்களின் நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், ஆன்மிக பாரம்பரியங்களுக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

