தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் திரு. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தர்மபுரி மக்களவை உறுப்பினர் வக்கில் ஆ.மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, ராஜேந்திரன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. பழனியப்பன், ஜூன் 3ஆம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்த நாளை மாவட்டம், ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனைகள், “நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் பல்லாண்டு சாதனை” என்ற தலைப்பில் ஒன்றியங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மற்றும் ஜூன் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பேருராட்சி தலைவர்கள் மனோகரன், பி.கே.முரளி, வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், வக்கில் கோபால், கண்ணபெருமாள், அடிலம் அன்பழகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் ஆனந்தன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக