தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மொரப்பூர் நெடுஞ்சாலையில், சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் முடங்கியிருந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் தகவலின்பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் உடனடியாக உதவியளித்து, அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையின் போது, அந்த மூதையவர் பராமரிப்பின்றி ஆதரவின்றி சாலையோரத்தில் வாழ்ந்து வந்தவர் என்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், அவரது உடலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினர் முன்வந்தனர். காரிமங்கலம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சக்திவேல், மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், மற்றும் அமைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
'மை தருமபுரி அமரர் சேவை' அமைப்பினர் இதுவரை 142 ஆதரவற்ற உடல்களுக்கு மரியாதை நல்கி நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக