இந்த மையம், அதிகாரப்பட்டி, மஞ்சவாடி, ஆலாபுரம், பையர்நத்தம், பாப்பிரெட்டிபட்டி டவுன் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமன்றி, அரசுத் துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் சதர்ன் ஸ்பின்னர்ஸ் மில், வரலஷ்மி மில், ராம் சுப்பு ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும் மின் விநியோகம் செய்யும் முக்கியமான மையமாக விளங்குகிறது.
சமீப காலமாக கடும் வெயில் மற்றும் வெப்ப சலனத்தால், பல இடங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பிகள் முறிந்து விழும் சம்பவங்கள் நிகழ்ந்து, பற்பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. ஆனால், மழை நின்ற பின்னும் பல மணி நேரங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாத நிலை தொடர்வதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மின்தடை குறித்து புகார் தெரிவிக்க பாப்பிரெட்டிபட்டி மின்பகிர்மான கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 04346-246448 எண்ணில் தொடர்புகொள்ள முயன்றபோது, சேவையில் இல்லை என காணப்படுகிறது. இதனால் அவசர காலங்களில் மக்கள் மின் வாரியத்தை தொடர்புகொள்ள முடியாத நிலை உருவாகி, உயிர்சேதத்திற்கே கூட வழிவகுக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலையை கருத்தில் கொண்டு, பாப்பிரெட்டிபட்டி மின்வாரிய செயற்பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் தொடர்பு கொள்ளக்கூடிய மாற்று எண்கள் மற்றும் அவசர ஹெல்ப்லைன் நம்பர்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், இதன் மேற்பார்வையை தர்மபுரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மேற்கொண்டு, பொதுமக்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- செய்தியாளர் அருண்.