பாலக்கோடு, மே 14 –
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 1999ம் ஆண்டு பேட்ஜ் முன்னாள் மாணவிகள் நெகிழ்ச்சியுடன் சந்தித்தார்கள். இது அந்தப் பள்ளி தொடங்கியதிலிருந்து நடைபெற்ற மிக முக்கியமான மாணவர் சந்திப்பாக அமைந்தது. 1999ல் பள்ளியை முடித்த மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக நிலைத்திருப்பதை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர். குடும்பங்களைப் பற்றிய அனுபவங்களும், பள்ளிக் கால நினைவுகளும் அந்நிகழ்வில் பரிமாறபட்டன.
அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளியிலேயே மதிய உணவை பகிர்ந்து கொண்டதுடன், பழைய ஆசிரியர்களான சுசீலா, கிருஷ்ணம்மாள், ஜெயசீலன் மற்றும் தற்போதைய தலைமை ஆசிரியர் பழனிசாமியின் ஆசிகளைப் பெற்றனர். அத்துடன், பள்ளிக்காக இரும்பு பீரோ ஒன்றையும் பரிசாக வழங்கி தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு நினைவுகூரும் தருணங்களை மகிழ்வுடன் கொண்டாடினர்.