தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்டுக்கோணாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாமியபுரம் கூட்டுரோட்டில், பொதுமக்கள் பயணிக்கும் சாலையை தொடர்ந்து ஆக்கிரமித்து அத்துமீறல் செய்கிறதாக சாமிகண்ணு குடும்பத்தினர் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் அமைத்து மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமின்றி, ஆக்கிரமிப்பை எதிர்த்தும் புகார் கொடுத்தும் வரும் மக்களை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
இது குறித்து வருவாய் அதிகாரிகளுக்கும், பாப்பிரெட்டிபட்டி காவல்நிலையத்தினருக்கும் புகார் அளிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்களிடம் வேதனை நிலவுகிறது. மேலும், "இந்த நிலம் எங்கள் சொத்து; இதை எதிர்த்து பேசுபவர்களை அடித்துவிடுவோம்; கூடவே கொலை செய்யவும் தயங்கமாட்டோம்" என சாமிகண்ணு கூறியதாகவும், இது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதனையடுத்து, பட்டுக்கோணாம்பட்டி பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் நேரில் மனு அளித்து, சாலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக