மொரப்பூர் – ஜனவரி 13:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவடை அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
விழாவின் தொடக்கத்தில் ஆசிரியர் சி.அழகிரி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து அறிவுரை வழங்கினர். விவசாயத்திற்கு மதிப்பு அளிக்க வேண்டும், விவசாயிகளை மரியாதையுடன் போற்ற வேண்டும், இயற்கை உணவுகளை உண்ண வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றும், 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
“நாம் அனைவரும் சமம்” என்ற நோக்கில், சாதி, மதம், வேறுபாடுகளை கடந்து சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், கபிலன், சாந்தி, இந்துமதி உள்ளிட்டோர், மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் வைத்து, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடிய இந்த சமத்துவ பொங்கல் விழா, மாணவர்களிடையே சமூக ஒற்றுமை மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

.jpg)