கம்பைநல்லூர் – ஜனவரி 13:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “புகைமாசில்லா சமத்துவ பொங்கல்” விழா இன்று (13.01.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த சிறப்பு நாளில், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் கொசு ஒழிப்புத் திட்ட பணியாளர்கள் பள்ளி சார்பில் வரவேற்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு (SMC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளிப்புரவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், மாணவ-மாணவியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மேலும், அனைவரும் ஒன்றிணைந்து மாசில்லா பொங்கல் கொண்டாடும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், சமத்துவம் மற்றும் சமூக மரியாதையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

.jpg)