தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் JCI விங்ஸ் தருமபுரி இணைந்து, சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், மாணவ–மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், உறியடித்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் சிலம்பரசன், முதல்வர் துரை, JCI விங்ஸ் தலைவர் கோகுல்ராஜ், முன்னாள் தலைவர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை ஊக்குவித்து பேசினர். சமத்துவம், ஒற்றுமை மற்றும் பண்பாட்டை வலியுறுத்தும் இந்த சமத்துவ பொங்கல் விழா, மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

.jpg)