தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதை போன்றே நேற்று மீண்டும் ஒரு விபத்து நடந்தது.
22.05.2025 அன்று சேலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, கணவாய் பகுதிக்கு வந்தபோது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரமாக மேம்பாட்டு பணிக்காக கொட்டப்பட்டிருந்த புதை மண்ணில் சிக்கி பேருந்து நிலை தடுமாறியது.
விபத்து நேரத்தில் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும், இந்த விபத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்வதைக் காரணமாகக் கொண்டு, நெடுஞ்சாலை துறையின் மெத்தன நடவடிக்கையை மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். "சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக செய்யப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்," என அவர்கள் கூறுகிறார்கள்.
விபத்துகள் நடைபெறாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மஞ்சவாடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தும் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக