ஏரியின் முழு பரப்பிலும் சீமை கருவேல மரங்கள் பரவியுள்ளதால், பொதுமக்கள் நீண்ட காலமாக அவற்றை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாலக்கோடு வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் திருமதி ரேணுகா மேற்பார்வையில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணியில், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் இதில் பங்கேற்று, ஏரியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க உறுதுணையாக உள்ளனர்.
சூடானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் திரு. வள்ளிநாகன் இந்த பணியை முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளின் பசுமை பராமரிப்பில் முக்கியமான படியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக