பாப்பிரெட்டிப்பட்டி, மே 10:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட கோழிமேக்கனூர் (ஜாலிக்காடு) வனப்பகுதி, தற்போது மதுப்பிரியர்களால் மாசடையும் சூழ்நிலையில் உள்ளது. காலை முதல் மாலை வரை இந்த வனப்பகுதிக்கு சென்று, மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் டம்ளர்களுடன் மதுவுசெய்யும் மதுப்பிரியர்கள், தங்கள் போதையில் கண்ணாடி பாட்டில்களை உடைத்து விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால், ஆடு-மாடு மேய்ச்சலுக்காக செல்லும் உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் கால்நடைகளுக்கு அபாயம் ஏற்படுகிறது. கூடவே, வனப்பகுதியில் இயற்கையாக இருக்கும் மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.
இதனைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக ஆர்வலராகவும், முன்னாள் பாதுகாப்புப் படை வீரராகவும் உள்ள திரு. அருண்குமார், அந்த பகுதியில் குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சி நிலையங்களுக்கு அனுப்பும் பணியை தன்னார்வமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோழிமேக்கனூர் வனப்பகுதியை மதுபோதையில் பயன்படுத்தும் செயலை நிறுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமையென்றும் அப்பகுதி மக்கள் மதுப்பிரியர்களிடம் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக