பாலக்கோடு கோட்டூர் கிராமத்தில் தமிழக அரசின் 4-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 மே, 2025

பாலக்கோடு கோட்டூர் கிராமத்தில் தமிழக அரசின் 4-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம்.


பாலக்கோடு, மே 10: 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மத்திய ஒன்றியம் சார்பில், தமிழக அரசு ஏற்படுத்திய 4-ம் ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கும் நோக்கில் பேவுஅள்ளி ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பி.கே.முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்ரமணி, அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, ஒன்றிய செயலாளர்கள் வக்கில் கோபால், அடிலம் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் அக்கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர்கள் கனல் சுப்ரமணி மற்றும் இளையராஜா, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினர். இதையடுத்து, உரையாற்றிய ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன்,

“முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிருக்கான விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்” என உறுதிமொழியுடன் கூறினார்.


நிகழ்வில் திமுகவின் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், துணை செயலாளர்கள் பி.எல்.ரவி, ஆறுமுகம், அற்புதம் செந்தில், மாவட்ட பிரதிநிதி மணி, முத்துசாமி, சார்பு அணி அமைப்பாளர்கள் சந்தர், ராஜபாட்ரங்கதுரை, அழகுசிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய பொருளாளர் குமார் நன்றி தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad