தருமபுரி, மே 18 –
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததற்காக காரிமங்கலத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தகவல் அடிப்படையில் காரிமங்கலம் போலீசார் பஸ்ஸ்டாண்ட், கடைவீதி, இராமசாமி கோயில், அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இராமசாமி கோயில் அருகே ஒருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், அவர் காரிமங்கலம் அருகே பேகாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பதும், சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதும் உறுதியாகியது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரது இடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.270 பணத்தை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக