அவர், புறநோயாளிகள் பதிவு செய்யும் பகுதி, உணவு தயாரிப்பு பகுதி, மருந்தகம் மற்றும் பிற சிகிச்சை பிரிவுகளில் நேரில் பார்வையிட்டு, மருத்துவ பணியாளர்களிடமிருந்து சேவைகள் குறித்து விளக்கங்கள் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கான சிகிச்சை தரம், மருந்து கையிருப்புகள், சுகாதார நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்த அவர், நோயாளிகள் உறவினர்கள் காத்திருக்கும் இடங்களில் உரிய அமர்வு வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மருத்துவமனை வளாகத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், சுத்தமாக பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் நீர் ஏற்க வேண்டும். வெளியே செல்லும்போது குடை, தண்ணீர் பாட்டில் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாய்வில், இணை இயக்குநர் (மருத்துவம்) டாக்டர் சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக