பாலக்கோடு, மே 18 –
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக கூடுதல் விலையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் தலைமையிலான போலீசார் தீவிர சோதனைக்கு இறங்கினர். சோதனை நடவடிக்கையின் போது, பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவம் தெரியவந்தது.
அந்த பகுதியில் மது விற்பனை செய்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 67) என்பதும், அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலையில் விற்பனை செய்ததும் உறுதியாகியது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மாரியப்பனிடம் இருந்து ரூ.4,050 மதிப்புள்ள 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட விடயத்தில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக