பாலக்கோடு, ஏப்ரல் 30:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ஜிட்டாண்அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள மதகேரி போடங்கல் இருளர் இன குடியிருப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வீ.டி. கோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மக்களவை உறுப்பினர் வக்கீல் ஆ.மணி கலந்துகொண்டு கல்வெட்டினை திறந்து வைத்து குடிநீர் இணைப்பைத் தொடக்கி வைத்தார்.
இந்த மலைப் பகுதியில் 80க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று, ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ், புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் வகையில், ஊர்மைய பகுதியில் மினி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மாநில விவசாய அணித் துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், சண்முகம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
அத்துடன், மாவட்ட, ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் இராஜபாட் ரங்கதுரை, சக்தி, முனிராஜ், பாக்கியராஜ், யுவராஜ், சிவாஜி, முனிரத்தினம், சண்முகம், அம்மாசி, எல்லப்பன், குமார், இளைஞரணி சிதம்பரம், ஜே.டி.விங் வினோத்குமார், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக