தர்மபுரி, ஏப்ரல் 30:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்ட பணி குழு சார்பிலும், தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்ரீதேவி மஹா கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பிலும், மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமை, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெ. நாகராணி (எ) விஜயராணி அவர்கள் துவக்கி வைத்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட சேவைகளைப் பெற்றனர். சிறப்பு மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
இதில் வழக்கறிஞர்கள், பேரூராட்சி தலைவர், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக