காரிமங்கலம் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

காரிமங்கலம் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்  மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அரியப்பன் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், அரூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் செல்லதுரை, ஒன்றிய செயலாளர்கள் MVT.கோபால், பி.கே.அன்பழகன், எஸ். முனியப்பன், அன்பழகன், கண்ணபெருமாள், வேடம்மாள், செங்கண்ணன், சந்திரமோகன், முத்துக்குமார், சரவணன், முல்லைரவி, சீனிவாசன்  ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கதமிழழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு   திமுக ஐடிவிங் வாட்சப் சேனலை நிர்வாகிகள் வாக்குசாவடி முகவர்கள், வாக்குசாவடி நிலை குழு உறுப்பினர்கள் அனைவரும் பின்தொடர்வது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, சென்னருஷ்ணன், வாசுதேவன், இளைஞர் அணி நிர்வாகிகள் சிவகுரு, மகேஷ்குமார், ஐடி விங் நிர்வாகிகள் ராஜ்கமல், பரணி, கண்ணப்பன், தமிழ்வாணன், லோகேஷ்வரி, அறிவழகன், சம்பத் மற்றும் 200க்கு மேற்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad