இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால், கண்ண பெருமாள், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை, மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், விவசாய அணி குமார், இளைஞரணி ஹரி பிரசாத், மகேஷ்,புதூர் பழனிச்சாமி, கோவிந்தராஜ், பழனி, சிவகுமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தமிழகத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே பல்வேறு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க திமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் திறக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியை தொடர்ந்து சி.எம் புதூர் பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் முருகன் அண்ணாமலை ,துரை, சண்முகம், வி.சி.குமார்,மகளிர் அணி கங்கா, முகுந்தன்,மகேஷ், மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக