பாப்பிரெட்டிப்பட்டி நகர் பகுதியான திருவிக நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நுழைவாயில் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படிருந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் , இது கடந்த சில நாட்களாக இந்த கண்காணிப்பு கேமரா காணவில்லை. பள்ளி செயல்படும் வேலை நாட்களில் காவல்துறையினர் தினமும் காலை மற்றும் மாலை இரு வேலையிலும் இவ்விடத்தில் செல்பி எடுத்து அவர்கள் பணியில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய டிபார்ட்மெண்ட்க்கு அனுப்பி வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவியர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் கண்காணிப்பு கேமரா மீதும் கவனம் செலுத்த வேண்டாமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர், காவல்துறை உடனடியாக மீண்டும் இந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுமா? என அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
காணாமல் போன கண்காணிப்பு கேமரா, மீண்டும் பொருத்தப்படுமா?
டிசம்பர் 18, 2024
0
Tags

.jpg)