Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் 5 மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை உரம் பயன்படுத்துவது குறித்து கருத்தரங்கு - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தனியார் உர நிறுவனங்களின் சார்பில் இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்து சேலம் மண்டல விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விவசாயிகள் பயன்படுத்தும் பல்வேறு வகையான நவீன விவசாய கருவிகள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு, இயற்கை உரங்கள், தேவையான கருவிகளை வாங்கிச் சென்றனர். 


மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற இயற்கை உரம் குறித்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு தங்களது விலை நிலங்களில் மண் பாதிப்படையாமல், மண் வளத்தை பாதுகாக்கவும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து அறுவடை செய்யும் வகையில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இந்த மண்டல விவசாயிகள் கருத்தரங்க கூட்டத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies