ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் 17ம் தேதி நடைப்பெற்ற அரசியலமைப்புசட்டம் 75வது ஆண்டு விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது எதற்கெடுத்தாலும் அம்பேத்கார், அம்பேத்கார் என பேசுவது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதில் கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும் என பேசியதை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, திமுக பேரூர் கழகம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரியும், மன்னிப்பு கேட்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர அவைத் தலைவர் அமானுல்லா, நகர துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், நகர பொருளார் துரை, கவுன்சிலர்கள் ரூஹித், சாதிக்பாஷா, மோகன், தீபாசரவணன், ஜெயந்திமோகன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில், கிளை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜீ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்.ஆனந்த், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நவ்சத் உள்ளிட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர்.

.jpg)