Type Here to Get Search Results !

புரத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டி அள்ளி  ஊராட்சியில் உள்ள புரத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் அவர்களின் தலைமையில்   நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு  முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர், வக்கில் கோபால், காரிமங்கலம் மத்திய  ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ,மாவட்ட  வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கில்  சந்திரசேகர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, ஒன்றிய துணை செயலாளர் செந்தில், ஒன்றிய பொருளார் குமார், சுற்றுசூழல் அணி மாவட்ட தலைவர் செழியன், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி,  அழகுசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் பொரத்தூர்  கிராமத்தில் வசித்து வரும்  200 மேற்பட்ட  குடும்பங்களை  பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் 9 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன்  பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணியை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், கவுன்சிலர்கள் குமார், இருசன், மாவட்ட பிரதிநிதி மணி, ஊர் கவுண்டர் கிருஷ்ணன், கிளை செயலாளர்கள் அனுமந்தன், மாதப்பன், குப்பன், வேலு  மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies