தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்தி செல்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று விடியற்காலை காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் எஸ்.ஐ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஐ. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினிசரக்கு லாரியை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததில் மினி சரக்கு லாரியில் இரகசிய அறை அமைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 1- டன் குட்கா சாக்கு பைகளில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, டிரைவரை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை ரவுசுபட்டி கிராமத்தை சேர்ந்த சரட்சகன் (வயது .35), என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களுரில் இருந்து கேரளாவிற்க்கு குட்கா மூட்டைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது, அதனை தொடர்ந்து மினிசரக்கு லாரியுடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.