தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மண்டல ஆலோசனை கூட்டம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான கு. பாரதி தலைமை வகித்தார். மாநில தலைவர் வி. முருகன், மாநில பொதுச்செயலாளர் கே. குமார் மாநில பொருளாளர் கே. ராமகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் கே. செல்வம், மாவட்ட தலைவர் பி. தினகரன், மாவட்ட பொருளாளர் பி. பரமசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. முருகன், மாவட்ட செயல் தலைவர் பி. வெங்கட்டேசன், மாவட்ட கெளரவ தலைவர் எல். அதிபதி, மாவட்ட பிரச்சார செயலாளர் ஜெயவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. எனவே ஊழியர்களை பணிநிரந்தம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். வேலை நேரத்தை 8 மணிநேரமாக்கி சிப்ட் முறையை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி பளுவை குறைக்கவேண்டும். காலி மதுபாட்டில்திரும்பபெறுவதை கைவிட வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.