தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள ராமாயி திருமணமண்டபத்தில் காரிமங்கலம் மத்திய ஒன்றிய திமுக செயல்வீரர்கள், பொது உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன்,மாவட்ட பொருளாளர் முருகன், விவசாயிகள் அணி மாநில துனைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் BCR மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி சிறப்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சிதேர்தல், கூட்டுறவுசங்க தேர்தல், 2026,சட்டமன்ற தேர்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நடைபெற உள்ள உள்ளாட்சி, கூட்டுற சங்கம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தலைமை யாரை வேட்பாளர்களாக அறிவித்தாலும், அவர்களின் வெற்றிக்கு கட்சி தொண்டர்கள் முழுமையாக பாடுபட வேண்டும், மேலும் கட்சிக்கு புதிய உறுப்பிணர்கள் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் கட்சி கொடி கம்பங்களை நிறுவி, செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மூத்த நிர்வாகிகளை கொண்டு கட்சி கொடி ஏற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கில் கோபால், முனியப்பன் பேரூர் செயலாளர் சீனிவாசன், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.