தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், முறையாக சாலை வரிசெலுத்தாத, உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் சாந்தி அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி அவர்கள் சோமனஅள்ளி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப்பட்டி நெடுஞ்சாலை வரை வாகன சோதனையில் மேற்கொண்டார்.
அப்போது கர்த்தாரப்பட்டி சுங்க சாவடி அருகே அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்ததில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஜே.சி.பி வாகனத்திற்க்கு தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்று பெறாமலும் அனுமதி இன்றி இயக்கப்பட்ட சரக்கு லாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டு 2 சரக்கு லாரிகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் என இன்றைய வாகன சோதனையில் மொத்தம் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.