தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரண அள்ளியில் சாலை விரிவாக்க பணிகளை தர்மபுரி கோட்டப் பொறியாளர் நாகராஜ் நேரில் ஆய்வு செய்தார். மாண்புமிகு நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்ட ஆலோசனைபடியும், நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சசிகுமார் அறிவுரையின் படியும் மொரப்பூர் - மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில், ஆரதஅள்ளி கூட்டுரோடு பகுதியில் இருந்து வெள்ளிச்சந்தை வரை இரு புறங்களில் சாலை அகலப்படுத்தும் பணியானது, தண்டுகாரனஹள்ளி சாலைப்பாது திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை, தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் சாலை பணிகள் விரைவாக முடித்து வாகன போக்குவரத்திற்கு விட வேண்டும் என்றும், மேலும் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் விடுபட்ட சாலை பணிகளை உடனடியாக கண்டறிந்து அதனை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவிபொறியாளர் ரஞ்சித்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.