சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையை ஆக்கிரமித்து கழிவு நீர் கால்வாய், மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளாக மாற்றி விட்டனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலை குறுகிய அளவுடையதாக மாறியதுடன், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று வந்த சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் அப்பகுதியினர் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி மனு அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, தலைமையில் ஆகஸ்ட் 22, வியாழக்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு போலீசார் பாதுகாப்புடன் பெரியாம்பட்டி நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

