தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம், சீங்கேரி கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாக சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து கடந்த 12ம் தேதி இரவு 8 மணிக்கு, இணைஇயக்குநர் டாக்டர் சாந்தி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவிணர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டில் கர்ப்பிணி பெண்கள் செல்வதை கண்காணித்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது 5 பேர் கொண்ட குழுவிணர் கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து தெரிவித்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து மருத்துவர் பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீசார் தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம் (வயது.39) வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (வயது.40), திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளான கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (வயது .45), சின்னராஜ் (வயது. 29) தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம் (வயது.39) ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல்கண்பாளர் மகேஸ்வரன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தார் இதற்கான உத்தரவை போலீசார் தர்மபுரி சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
